விளையாட்டு

தோல்வி குறித்து தோனி கூறிய காரணம்

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் செல்ல தவறி உள்ளது. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7ல் தோல்வி அடைந்துள்ளனர்.

குறிப்பாக சென்னை அணியின் கோட்டை என்று சொல்லப்படும் சேப்பாக்கம் மைதானத்திலேயே தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இதனால் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப்பில் இருந்து வெளியேறி உள்ளனர்.

ஐபிஎல் 2025 தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதுவுமே சிறப்பாக அமையவில்லை. பேட்டிங், பௌலிங் மற்றும் பில்டிங் என அனைத்தும் மோசமாக இருந்தது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பிறகு சரியான அணியின் காம்பினேஷனை கண்டுபிடிக்கவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சவாலான ஒன்றாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்தாலும் எதுவுமே சாதகமாக இல்லை. மேலும் கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக வெளியேறியதால் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் 2025க் காண பிளே ஆப் ரேஸில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேற நிலையில் இதற்கான காரணம் குறித்து தோனி பேசி உள்ளார்.

சன்ரைசஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய தோனி, “நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தோம், முதல் இன்னிங்ஸில் விக்கெட் சற்று சிறப்பாக இருந்தது. 155 ரன்கள் என்பது நியாயமான ஸ்கோர் அல்ல, ஏனெனில் பந்து அதிகம் திரும்பவில்லை. 8-10வது ஓவருக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் வழக்கத்திற்கு மாறான எதுவும் இல்லை, நாங்கள் இன்னும் சில ரன்களை டார்கெட்டாக செட் செய்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு சற்று எளிதாக இருந்தது. எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் தரம் இருந்தது, அவர்கள் சரியான பகுதிகளில் பந்து வீசினர்.

ஆனால் நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக அடித்து இருந்தோம். ப்ரெவிஸ் மிகவும் நன்றாக பேட் செய்தார் என்று நினைக்கிறேன், மிடில் ஆர்டரில் நமக்கு அப்படி ஏதாவது தேவை, ஸ்பின்னர்கள் வரும்போது நாங்கள் சற்று சிரமப்பட்டிருக்கிறோம். உங்கள் ஏரியாவில் பெரிய ஷாட் அடிக்க முயற்சிக்க வேண்டும். அங்குதான் நாங்கள் பற்றாக்குறையாக இருக்கிறோம், உண்மையில் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது நடுவில் நல்ல வேகத்தில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ரன்கள் எடுக்கவோ முடியவில்லை என்று நினைக்கிறேன். இது போன்ற ஒரு போட்டியில், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் ஓட்டைகளை நிரப்ப முடிந்தால் அது நல்லதுதான். ஆனால் உங்கள் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால், அது மிகவும் கடினமாகிவிடும்.

ஏனென்றால் நீங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும், ஆனால் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டால், அந்த வீரர்களுக்கு கூடுதலாக சில ஆட்டங்களைக் கொடுக்க வேண்டும். அது பலனளிக்கவில்லை என்றால், அடுத்த ஆட்டத்திற்குச் செல்லுங்கள். ஆனால் அவர்களில் 4 பேர் ஒரே நேரத்தில் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், நீங்கள் அந்த மாற்றத்தைச் செய்ய வேண்டியிருக்கும். ஏனென்றால் நீங்கள் தொடர்ந்து முன்னேற முடியாது. ஏனென்றால் நாங்கள் டார்கெட்டாக போதுமான ரன்கள் போடவில்லை. முன்பு போல இல்லை. அது இப்போது அவசியம், ஆட்டம் மாறிவிட்டது. எப்போதும் 180-200 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நிலைமைகளை மதிப்பிட்டு, பின்னர் தேவையான ரன்களை வைக்க முயற்சி செய்யுங்கள்” என்று தோனி தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ