மீண்டும் கேப்டனாக களமிறங்கும் தோனி – தொடரில் இருந்து விலகிய ருதுராஜ்

நடப்பு ஐபிஎல் தொடரின் சென்னை அணியின் கேப்டனாக இருந்த வந்த ருதுராஜ் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் பந்து வீச்சில் ருதுராஜ் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக மீண்டும் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கபட்டு உள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனையடுத்து மீண்டும் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதேபோல இந்தமுறையும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)