சிட்னி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் தனுஷ்க குணத்திலக்கவின் வழக்கு!
இலங்கை கிரிகெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றசாட்டுடன் தொடர்புடைய வழக்கு அடுத்த வாரம் சிட்னி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
வரும் திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணைகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் தனுஷ்க குணதிலக்க நவம்பர் 06 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 14 times, 1 visits today)





