பிணையில் விடுதலையானார் தம்மிக்க : கைது செய்யப்படும் அர்ஜுன ரணதுங்க?
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க 01 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் வெளிநாடு செல்வதற்கு தடை செய்த நீதிபதி, அவரது அமெரிக்க மற்றும் இலங்கை பயண ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் பெட்ரோலிய வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை சந்தேக நபராகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு நீதவானிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





