ஜனாதிபதி பதவியை குறிவைத்துள்ள தம்மிக்க பெரேரா!! கட்சிகளின் ஆதரவை பெற தீவிர ஆர்வம்
நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.
அதன்படி மற்ற கட்சிகளின் ஆதரவை எப்படி பெறுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சிகளின் ஆதரவுடன் 51 வீதம் பெறலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டவர்களில் தம்மிக்க பெரேராவும் அடங்குவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.





