மின்சாரத்துறையை மறுசீரமைத்தல் குறித்து அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை!

நாட்டின் மின்சாரத்துறையை மறுசீரமைத்தல் மற்றும் அதன் வினைத்திறனை மேம்படுத்தல் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர> ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை சபையின் பணிப்பாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய மின்சக்தி துறையை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்களுக்குத் தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள், மின் உற்பத்தி நிறுவனங்களாக மேம்படுத்தும் போது அரச – தனியார் கூட்டு வர்த்தக வழிமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் அவற்றுக்கு தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்புக்களை வழங்கல் குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.
(Visited 4 times, 1 visits today)