இலங்கை பொழுதுபோக்கு

இலங்கைப் பாடகி யொஹானியின் “மெனிகே” பாடலை காப்பியடித்து சிக்கிய அனிருத்…

அனிருத்தான் இசையமைப்பில் அடுத்ததாக வேட்டையன், விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படம் என வரிசையாக ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் இசையமைத்திருக்கும் தேவரா படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டாவது சிங்கிள் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

அனிருத்தின் இசையமைப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தின் முதல் பாகத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பக்கபலமாக இருந்தது. ஆனால் இரண்டாவது பாகத்திலோ அனிருத்தின் சுத்தமாக செட் ஆகவில்லை என்று பலர் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் அனிருத்தின் இசையில் தேவரா படம் உருவாகியிருக்கிறது. அதில் ஜூனியர் என்.டிஆர் – ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் நேற்று வெளியானது.

ஆனால் அந்தப் பாடல் இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அதாவது பொதுவாகவே அனிருத் வேறு பாடல் ட்யூனை எடுத்து பட்டி டிங்கரிங் செய்து புது பாடலை உருவாக்குவார் என்று குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருக்கிறது.

இப்போது வெளியாகியிருக்கும் செகண்ட் சிங்கிளையும் இலங்கையில் உருவான மனிகே மஹே என்ற ஆல்பம் பாடலிலிருந்துதான் உருவாக்கியிருக்கிறார் என்று அந்தப் பாடலையும், இந்தப் பாடலையும் கம்ப்பேர் செய்து நெட்டிசன்ஸ் சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர்.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!