ஹெரோயினுடன் 11 சந்தேக நபர்கள் கைது: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தென் கடற்பரப்பில் 65 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படியில் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை தடுத்து வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் (PNB) 07 நாட்கள் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தென் கடற்பரப்பில் 2 மீன்பிடி படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட இந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் 11 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)