ஜெர்மனியில் பாழடைந்து கிடக்கும் வீடுகள் – கொள்வனவு செய்ய நிதி உதவி
ஜெர்மனியில் மக்களின் இன்றி வெறுமையாக இருக்கும் வீடுகளை கொள்வனவு செய்வதற்கு இளைஞர்களுக்கு அரசாங்கம் நிதி உதவு அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜெர்மனியில் தற்பொழுது வீடுகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் புதிய ஆய்வு தகவலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்சஸ் அமைப்பானது சில புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.
தற்பொழுது அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 20 லட்ச வீடுகள் வெறுமையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 சதவீதத்திற்கு மேற்பட்ட வீடுகள் ஒரு வருடமாக இவ்வாறு வெறுமையாக இருப்பதாக குறித்த அமைப்பானது தெரிவித்துள்ளது.
வெறுமையாக இருக்கும் வீடுகளின் சொந்தக்காரர்கள் வீடுகளை திருத்துவதற்கு முயற்சி செய்வதாகவும், இந்நிலையில் வெப்ப மூட்டிகளுக்கு அரசாங்கத்திடம் நிதி விண்ணப்பங்களை கொண்டு காத்திருப்பதாகவும், அமைப்பானது தெரிவித்துள்ளது.
ஜெர்மன் அரசாங்கமானது வீடுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற காரணத்தினால் வருடம் ஆக குறைந்தது 4 லட்சம் வீடுகுளை கட்டுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியின் கட்டெ துறை நிர்மாண அமைச்சர் ஹைவேஸ்ட் அவர்களின் தகவலின் அடிப்படையில் இவ்வாறு திருத்தப்படாத நிலையில் உள்ள வீடுகளை இளம் குடும்பத்தினர் வேண்டுவதற்கு உதவி நிதி தொகைகளை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இளைய சமூதாயத்தினர் திருத்தப்பட்ட வேண்டிய வீடுகளை திருத்தப்பட வேண்டியதன் மூலம் குறித்த வீடுகளில் குடியேற முடியும் என்ற தகவலை அவர் தெரிவித்துள்ளார்.