இந்தியா செய்தி

கழக தோழர்களிடம் வேண்டுகோள் விடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது.

பிறந்த நாள் விழாவை ‘உதயநிதி உதயநாள் விழா’ என்ற பெயரில் ஒரு மாத காலம் கொண்டாட சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஃபிளெக்ஸ் பேனர் வைப்பதையும், பட்டாசுகள் வெடிப்பதையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என் பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறீர்கள். இந்தப் பேரன்பு தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாகத்தை, ஊக்கத்தை எனக்குத் தருகிறது .

உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் இவ்வேளையில், என்னுடைய இந்தப் பிறந்தநாள் வேண்டுகோளையும் நினைவில்கொள்ளுமாறு, உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!