வங்கக் கடலை சுற்றி உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை : இலங்கை வானிலையில் மாற்றம்!
வடக்கு வங்கக் கடலைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் நாளை (29.08) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த கடற்பரப்புகளில் மிக பலத்த காற்றுடன் (மணித்தியாலத்துக்கு 70-80 கி.மீ.) கனமழை பெய்யக்கூடும் என்றும், அந்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடற்படை கப்பல்களில் ஈடுபடும் பணியாளர்கள் உடனடியாக நிலம் அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (29) பிற்பகல் 3:30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (29) பிற்பகல் 3:30 மணி வரை செல்லுபடியாகும்.
(Visited 1 times, 1 visits today)