ஜெர்மனியில் நாடு கடத்தல் நடவடிக்கை தீவிரம் – தயார் நிலையில் விமானங்கள்

ஜெர்மனியில் புதிய அரசாங்கம் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், நாடு கடத்தல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இந்த ஆண்டு பல நாடுகடத்தல் விமானங்களை ஏற்பாடு செய்யப்போவதாக ஹெஸ்ஸியின் உள்துறை அமைச்சர் ரோமன் போசெக் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், ஜெர்மனியில் இருந்து பாகிஸ்தானுக்கு 43 பேர் ஒரு தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதில் ஹெஸ்ஸியைச் சேர்ந்த ஆறு பேர் அடங்குவதோடு அவர்களில் இருவர் குற்றவாளிகளும் ஆவர்.
விமானங்களுக்கு மேலதிகமாக, ஹெஸ்ஸியிலிருந்து நாடுகடத்தலுக்கு பேருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், இந்த பிரச்சினையில் ஹெஸ்ஸி மாநில அரசு, மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.
அல்டர்னேட்டிவ் ஃப்யூர் டாய்ச்ச்லாந்த் அரசியல்வாதிகள் நாடுகடத்துவதில் அரசாங்கத்தின் முயற்சிகளை விமரசித்திருந்தனர்.