தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை நாடு கடத்தல்
தென்கிழக்கு ஆசியாவில் சட்டவிரோத சூதாட்டச் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சீனப் பிரஜை ஒருவர் நாடு கடத்தப்படுகிறார்.
இந்த மனிதரின் பெயர் ஷேய்க் சிஜியாங் என்பதாகும்.
இவர் சீன அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
இவரைச் சீனாவிற்கு நாடு கடத்த வேண்டுமென தாய்லாந்து நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
தாய்லாந்து மன்னர் சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளத் தயாராகும் சந்தர்ப்பத்தில் இந்த நாடு கடத்தல் நிகழ்கிறது.
(Visited 3 times, 3 visits today)





