ஜெர்மனியில் சட்டத்தை மீறினால் நாடு கடத்தல்
இஸ்ரேயல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக போர் தீவிரமடைந்து வருகின்றது.
இந்த நிலையில் ஜெர்மனியில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயற்படுவோர் மற்றும் ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வோர் நாடு கடத்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவை தெரிவிக்கும் முகமாக ஜெர்மனியில் வாழும் பாலஸ்தீனர்கள் ஆர்பாட்டங்களை நடத்துவதற்கு ஆர்வம் காட்டிவருகின்றனர்.
அதனை தடுக்கும் விதமாக பாலஸ்தீனர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான முறையில் ஆர்ப்பாட்டங்களில் பங்கு பற்றியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜெர்மனியின் ஜனநாயக கட்சியுடைய தலைவர் லாஸ்க் கிளின் பேர்க் அவர்கள் தெரிவித்துள்ளனர்.





