செய்தி

2024ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் டென்மார்க்கின் விக்டோரியா கெயர்!

இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேயா தெய்ல்விக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டென்மார்க் போட்டியாளர் ஒருவர் இச்சிறப்பைப் பெற்றிருப்பது இதுவே முதன்முறை.21 வயதாகும் அவர், நடனமணி, தொழில்முனைவர், விலங்குநல ஆர்வலர் எனப் பன்முகத் திறன்களைக் கொண்டவர்.

மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற 73வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் 120க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.

இரண்டாம் பரிசுக்குத் தேர்வானார் நைஜீரியாவின் சிடிம்மா அடெட்ஷினா. இவர் சட்டம் பயிலும் மாணவி.

போட்டியில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பரிசுகளை முறையே மெக்சிகோ, தாய்லாந்து, வெனிசுவேலா நாட்டு அழகிகள் பெற்றனர்.

இவர்களில் வெனிசுவேலா போட்டியாளரான 28 வயது மார்க்கெஸ், பிள்ளை பெற்ற பிறகும் அந்நாட்டில் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாவார்.

2023ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகிப் போட்டியில் திருமணமான, பருமனான, பாலின மாற்றம் செய்துகொண்ட போட்டியாளர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இந்த ஆண்டு, 28 வயதுக்குமேல் வயதுடைய பெண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதற்குமுன் அத்தகையோர் போட்டியில் பங்கேற்க இயலாது.

மெக்சிகோ ஐந்தாவது முறையாக இந்தப் போட்டியை ஏற்றுநடத்தியுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி