உலகின் மிக சக்திவாய்ந்த கணினியை உருவாக்கும் டென்மார்க்!

நோவோ நோர்டிஸ்க் அறக்கட்டளை மற்றும் டென்மார்க்கின் அரசுக்குச் சொந்தமான கடன் நிதியம் ஆகியன இணைந்து உலகின் மிக சக்திவாய்ந்த கணினியை உருவாக்குவதாக அறிவித்துள்ளனர்.
மருந்து நிறுவனமான நோவோ நோர்டிஸ்கைக் கட்டுப்படுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனமான நோவோ நோர்டிஸ்க் அறக்கட்டளை மற்றும் டென்மார்க்கின் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு நிதியம் (EIFO), ஒரு அறிக்கையில் 80 மில்லியன் யூரோக்களை ($92.93 மில்லியன்) QuNorth என்ற முயற்சியில் முதலீடு செய்வதாகக் கூறியுள்ளன.
குவாண்டம் கணினி என அழைக்கப்படும் இக் கணினியானது மருந்து கண்டுபிடிப்பு மற்றும் பொருள் அறிவியல் போன்ற துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது.
குவாண்டம் கம்ப்யூட்டிங் இன்றைய அமைப்புகளுக்கு மில்லியன் கணக்கான ஆண்டுகள் எடுக்கும் கணக்கீடுகளை மேற்கொள்வதற்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளது.
டென்மார்க்கில் மிகப்பெரிய குவாண்டம் ஆய்வகத்தைக் கொண்ட மைக்ரோசாப்ட் மென்பொருளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.