செய்தி தமிழ்நாடு

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆவுடையார்கோவிலில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் தாலுகா தலைவர் வீரையா தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் 200 நாள் வேலையும் ரூபாய் 600 கூலியும் வழங்க வேண்டும்.

நெட் வேலை செய்யவில்லை என்று மதியம் 11 மணி வரை தொழிலாளரை காக்க வைத்து வீட்டுக்கு அனுப்பும் செயலை கைவிட வேண்டியும், கிராமசபையில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு உடன் நடவடிக்கை எடுக்க கோரியும் , அரிமழம் ஊராட்சி ஒன்றியம் இரும்பாநாடு ஊராட்சியில் 1987ம் ஆண்டு இந்திரா கூட்டு குடியிருப்பு திட்டத்தில் கட்டிகொடுக்கப்பட்ட 20 வீடுகளுக்கும் குடிமனை பட்ட வழங்க வேண்டும்.

என்றும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட் பத்தில் மாவட்ட நிர்வாகி C.S.சுப்பிரமணியன்.

சிபிஎம் தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஷ், சிஐடியு கூத்தப் பெருமாள், தமிழ்நாடு விவசாய சங்க அழகர், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் நாகூரம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

(Visited 5 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி