இலங்கை

மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்ல நினைவு தூபி இடித்தழிப்பு

மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபியை பொலிஸார் இன்று வியாழக்கிழமை (23) இடித்து தள்ளியுள்ளனர்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவருவதாக நீதிமன்ற உத்தரவுடன் சென்று அந்த நினைவு தூபியை பொலிஸார் இடித்து தள்ளியுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு தூபி ஒன்றை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கல்லால் அமைத்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த நினைவு தூபி அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுவருவதாக இதனை உடன் அகற்றுமாறு உத்தரவிடக்கோரிகோரி பொலிஸார் வாழைச்சேனை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் அதனை அகற்ற உடனே அகற்றுமாறு உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுடன் தரவை மாவீரர் இல்லத்துக்குள் நுழைந்த பொலிஸார் அந்த நினைவு தூபியை இடடித்து தள்ளி சென்றுள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!