ஜனநாயகம் அதிக ஆபத்தில் உள்ளது – பைடன் எச்சரிக்கை
உலகளவில் ஜனநாயகம் இப்போதுதான் அதிக ஆபத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளர்.
பிரான்சின் நார்மண்டி நகரில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரை நினைவுகூரும் D-Day நிகழ்ச்சியில் அவர் பேசிய போது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமும் ஜனநாயகமும் காக்கப்பட வேண்டும் என பைடன் குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரஞ்சு ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் உக்ரேனுக்கு கொடுக்கும் ஆதவு குறையாது என கூறியுள்ளார்.
இவ்வாண்டின் இடம்பெற்ற 80வது நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ரஷ்யா அழைக்கப்படவில்லை.
1944ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி ஜெர்மனியின் நாஸிப் படைகளை வெளியேற்ற நட்பு நாடுகளின் 150,000க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் பிரான்ஸை அடைந்தனர்.
அந்த நாள் D-Day என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் அது முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.