சீன விமானங்கள் அமெரிக்காவில் தரையிறங்குவதை கட்டுப்படுத்த கோரிக்கை!

அமெரிக்க நிர்வாகம் சீனா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றது.
இதன் மற்றொரு பகுதியாக தற்போது அந்நாட்டின் விமானங்கள் அமெரிக்க விமான நிலையங்களில் தரையிறங்குவதை கட்டுப்படுத்தவோ, அல்லது நிறுத்திவைக்கவோ வேண்டும் என சீனாவிற்கான அமெரிக்க பிரதிநிதிகள் சபைக் குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அரிய மண் தாதுக்கள் மற்றும் காந்தங்களுக்கான முழுமையான அணுகலை பெய்ஜிங் மீட்டெடுக்காவிட்டால் இந்த நடவடிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதி ஜான் மூலெனார், சீன விமானங்களுக்கான பராமரிப்பு சேவைகளை வழங்குவது உட்பட பிற சேவைகள் தொடர்பான கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக சீனா 500 போயிங் விமானங்களை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஜான் மூலெனார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.