ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 15 பெங்குவின்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

பிரித்தானியாவில் Sea Life London Aquarium மீன் காட்சியகத்தில் உள்ள 15 பென்குயின்களை உரிய பகுதிகளில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விலங்குநல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

அந்தப் பென்குயின்கள் 14 ஆண்டுகளாகச் சூரிய வெளிச்சமோ சுத்தமான காற்று வசதியில்லாத அடித்தளத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அவற்றின் நீச்சல் குளத்தின் ஆழம் சுமார் 2 மீட்டர் மட்டுமே என்று BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், அது பென்குயின்களுக்கு போதுமான இடம் என காட்சியகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், வனவிலங்கு நிபுணர்களின் ஆலோசனையின்படி அவற்றின் வசிப்பிடம் வடிவமைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான பென்குயின்களின் விடுதலை தொடர்பில் சுமார் 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

(Visited 2 times, 5 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி