உலகம் செய்தி

ஆங் சான் சூகியை (Aung San Suu Kyi) நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தல்!

மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூ கியை (Aung San Suu Kyi) உடனடியாக விடுதலை செய்யுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) வலியுறுத்தியுள்ளார்.

தற்போது இராணுவ காவலில் உள்ள அவருக்கு உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், மக்ரோன் மேற்படி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், உடல் நிலை மோசமடைந்துவருகின்ற  நிலையில், பொருத்தமான சிகிச்சையை அணுகுவதில் உள்ள சிரமங்கள் தொடர்பில் ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi)  மகன் கூறுவதை கேட்கும்பொழுது கவலையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிபந்தனையற்ற விடுதலையை வலியுறுத்திய அவர், ஆட்சி கவிழ்ப்பிற்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான தனது வன்முறையற்ற போராட்டத்திற்காக 1991 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூ கி, மியன்மாரை இராணுவம் கைப்பற்றியதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஊழல் மற்றும் தேர்தல் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு 27 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!