இந்தியா

டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் – விமான, போக்குவரத்து சேவைகள் முடக்கம்

டெல்லியின் காற்றின் தரக் குறியீடு இன்று (17) காலை 329 புள்ளிகளில் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவலின்படி, டெல்லி முழுவதும் உள்ள அனைத்து கண்காணிப்பு நிலையங்களிலும் காலை 7 மணி நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு கடுமையான வரம்பிற்குக் கீழே இருந்தது.

சில பகுதிகள் மோசமான மண்டலத்தில் பதிவாகியுள்ளன.

நேற்றைய தினம் பலத்த காற்று மற்றும் மெல்லிய மூடுபனி மாசுபாட்டின் அளவை கடுமையான வகையிலிருந்து வெளியே தள்ள உதவியது.

இதனால் 354 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு 24 மணி நேரத்தில் 329 புள்ளிகளாக குறைந்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, 0 முதல் 50 வரையிலான காற்றின் தரக் குறியீடு ‘நல்லது’ என்றும், 51 முதல் 100 வரை ‘திருப்திகரமானது’ என்றும், 101 முதல் 200 வரை ‘மிதமானது’ என்றும், 201 முதல் 300 வரை ‘மோசம்’ என்றும், 301 முதல் 400 வரை ‘மிகவும் மோசமானது’ என்றும், 401 முதல் 500 வரை ‘கடுமையானது’ என்றும் கருதப்படுகிறது.

கடந்த மூன்று நாட்களாக தலைநகரையே ஸ்தம்பிக்க வைத்த அடர்த்தியான புகைமூட்டம் காரணமாக வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், விமானம் மற்றும் போக்குவரத்து சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

TK

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!