டெல்லி செங்கோட்டை தாக்குதல் – மேலும் நால்வர் கைது!
டெல்லி செங்கோட்டைக்கு அருகில் நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக மூன்று மருத்துவர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றதாக இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் முசம்மில் ஷகீல் கனாய், டாக்டர் அதீல் அகமது ராதர், டாக்டர் முஃப்தி இர்பான் அகமது வாகே, மற்றும் ஷாஹீன் சயீத் ஆகிய நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
“அவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய பங்கு வகிப்பதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கனாய், ராதர் மற்றும் வாகே ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத குழுவுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும், முன்னதாக அவர்கள் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரின் காவலில் இருந்தவர்கள் எனவும் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் அவர்களின் குடும்பத்தினர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, அவர்கள் நிரபராதிகள் என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




