இந்தியாவின் டெல்லிக்கான விமான சேவைகள் பாதிப்பு
இந்தியாவின் டெல்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்குத் தயாரான சில விமானங்கள் தாமதம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சில மணி நேரங்களுக்குப் பின்னர் தங்களது விமானப் போக்குவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாக, இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.





