இந்திய அணியில் நுழைந்த தீபக் சாஹர்..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஐந்து டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
இந்த போட்டிக்கு முன் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. இத்தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், தனது திருமணத்திற்காக அணியில் இருந்து நீக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தார்.
அவரின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டு இந்திய அணியில் மீதமுள்ள போட்டிகளுக்கு முகேஷ் குமாருக்கு பதிலாக இந்திய அணியில் தீபக் சாஹரும் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் முகேஷ் குமாருக்கு பதிலாக அவேஷ் கான் இடம்பிடித்தார். ஆனால் நான்காவது போட்டிக்கு முன்னதாக தீபக் சாஹர் இந்திய அணியில் இணையவுள்ளார். இவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் ப்ளேயிங் லெவனில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு குஜராத் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியில் தீபக் சாஹர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சாஹரின் இந்த சிறப்பான ஆட்டத்தின் அடிப்படையில் ராஜஸ்தான் அணி குஜராத்தை 128 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீபக் சாஹர் கடைசியாக டிசம்பர் 2022 இல் இந்தியாவுக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.