மகாவம்சம் நூல் வரலாற்று சின்னமாக பிரகடனம்
இலங்கையின் மகாவம்சம் நூல் யுனெஸ்கோவினால் வரலாற்று நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் இம்மாதம் 24ஆம் திகதி வெளியிடப்பட்டதாக பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் வசமுள்ள ஒல்லாந்தர் காலத்துக்கான ஆவணங்கள் மற்றும் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் தொடர்பான ஆவணங்கள் என்பன வரலாற்று சின்னமாக பெயரிட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 18 times, 1 visits today)





