நாட்டின் வெளிநாட்டுக் கடன் தொடர்பாக இரண்டு மாதங்களில் தீர்க்கமான முடிவு
நாட்டின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் விரைவில் இணக்கப்பாடு எட்டப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த 2 மாதங்களில், நாட்டின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக, வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் கொள்கை ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்.
இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த கொள்கை அறிக்கையை இன்று சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் உள்நாட்டு கடன் மேம்படுத்தல் திட்டத்தை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பதில், கடன் மறுசீரமைப்பிற்காக அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனா எக்ஸிம் வங்கியுடன் கொள்கை உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, ஏனைய கடன் வழங்குநர்கள் மற்றும் வர்த்தக கடனாளிகளுடன் நல்லெண்ணப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்பதால், அடுத்த இரண்டு மாதங்களில் கூடிய விரைவில் கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும் என மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்.