இலங்கை

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய தீர்மானம்!

சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் சதொச ஊடாக உரிய முட்டைகளை விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தையில் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை எனவும், முட்டையின் விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு நுகர்வோருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளாந்தம் சுமார் 100,000 முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர்  நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!