இலங்கையில் சிறு குற்றங்களை செய்த கைதிகளை விடுவிக்க தீர்மானம்!

சிறு குற்றங்களுக்காக சிறையிலுள்ள சுமார் 350 கைதிகள் நாளை (12.08) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கைதிகள் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட பொதுமன்னிப்பு கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
(Visited 23 times, 1 visits today)