இலங்கை

இலங்கை : சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்!

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், மத்திய வங்கியும் இது தொடர்பில் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக எதிர்காலத்தில் முறையான முறைமை தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஒரு குறிப்பிட்ட முறைப்படி வாகன இறக்குமதி நடைமுறைக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கு மத்திய வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் முறையான அமைப்பை தயாரித்து அந்த அமைப்பு என்னவாக இருக்கும் என்பதை தெரிவிப்பேன். பல்வேறு நபர்களை உள்ளடக்கிய விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.

எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, எங்கள் பணம் ஒரே நேரத்தில் வராமல் இருக்க இது முறையாக செய்யப்பட வேண்டும்”  எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்