கேகாலை மாவட்ட பாடசாலை ஒன்றை மூட தீர்மானம்!

மண்சரிவு அபாயம் காரணமாக கேகாலை புனித ஜோசப் பெண்கள் கனிஷ்ட கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் அனுஷ்கா சமிலா அவர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை புனித ஜோசப் பெண்கள் கனிஷ்ட கல்லூரியின் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கு அருகாமையில் நிலவும் கடும் மழையினால் மண்மேட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்காணிப்புக்குப் பிறகு, அந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பள்ளியை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
(Visited 17 times, 1 visits today)