அமெரிக்காவில் கைவிடப்பட்ட நாய்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்
அமெரிக்காவில் நாய்களை தத்தெடுப்பதை ஊக்குவிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட நாய்களை தத்தெடுத்து வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாய்க்குட்டி கிண்ணம் 21 என்று பெயரிட்டு இருபத்து ஓராவது ஆண்டாக நடைபெற்ற போட்டியில் 40 மாகாணங்களில் இருந்து மீட்கப்பட்ட பல்வேறு இனத்தை சேர்ந்த 142 நாய்கள் கலந்து கொண்டன.
பார்வை குறைபாடு, உடல் ஊனம் போன்ற சிறப்பு தேவையுள்ள 11 நாய்களும் போட்டியில் கலந்து கொண்டன. இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)