இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
அண்மையில் முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை சட்ட நடைமுறைகள் மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர் நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
“வெளியுறவு அமைச்சகம் மியான்மர் அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளதாகவும், பெயர் பட்டியல் ஏற்கனவே அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் முல்லைத்தீவு வந்தடைந்த அகதிகள் குழு அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் முடியும் வரை அங்கேயே தடுத்து வைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
டிசெம்பர் 19ஆம் திகதி ரொஹிங்கியாவிலிருந்து 115 பேரை ஏற்றிச் சென்ற பலநாள் இழுவைப்படகு திசை மாறி இலங்கை கடற்பரப்பை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





