இலங்கையில் எரிபொருளுக்கான வரிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

இலங்கையில் விதிக்கப்பட்டு எரிபொருளுக்கான வரிகளை விரைவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து விரிவான அறிக்கை எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளர்.
அத்துடன் எரிபொருள் கூட்டுத்தாபனம் எவ்வாறு நஷ்டத்தை சந்தித்தது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)