கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெர்மனி – அரசாங்கத்திற்கு காத்திருக்கும் அபாயம்
ஜெர்மனியில் கடன் நெருக்கடி அதிகரித்துள்ளமையினால் கூட்டு அரசாங்கமானது கவிழும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஜெர்மன் அரசாங்கமானது எதிர்வரும் ஆண்டு 60 பில்லியன் யூரோக்களை கடன் பெறுவதற்காக உத்தேசித்து இருந்தது. இந்நிலையில் இது ஜெர்மனியின் அடிப்படை சட்டத்துக்கு விரோதமான செயற்பாடு என ஜெர்மனியின் பிரதான எதிர் கட்சியாக செயற்படுகின்ற AFD கட்சியானது வழக்கை தொடர்ந்து இருந்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றமானது ஜெர்மனியுடைய தற்போதைய கூட்டு அரசாங்கமானது மேலதிக தொகையான 60 பில்லியன் யுரோக்களை கடன் எடுக்க முடியாது என்று தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தது.
இதேவேளையில் தற்பொழுது ஆளும் கூட்டு கட்சியின் மற்றுமொரு பங்காளி கட்சியான FDPகட்சி இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது FDP கட்சியுடைய கட்சி உறுப்பினர்கள் அதாவது கட்சியானது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க கூடாது என்ற கருத்து கூடுதலாக் பகிரப்பட்டுள்ளது.