இராவணன் யார் என்ற விவாதம் தமிழர்களை வந்தேறு குடிகள் என்று இழிவு படுத்தவா?
இலங்கை பாராளுமன்றத்தலில் கடந்த வாரம் ஒரு பட்டி மன்றமொன்று இடம் பெற்றிருக்கிறது, இராவணன் யார்? அவன் தமிழ் மன்னனா? சிங்களவனா என்ற வாக்குவாதம் இடம் பெற்றிருக்கிறது.
இந்த சொற்போரில் கலந்துகொண்டவர்கள் சிங்களத்தரப்பில், பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீர சேகரா மற்றம் ஹெல உறுமயவின் தலைவர் உதயன்கம்மன்பில. அவன் தமிழ் மன்னன்தான் என்ற பக்கமாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் ஸ்ரீதரன் வாதித்திருக்கிறார். சரத்வீரசேகரா தலைசிறந்த இனவாதத்துக்கான பட்டத்தை பெற்ற ஒருவரா ஸ்ரீதரன் தமிழ்த்தேசியத்துக்காக பாரளுமன்றில் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர்.
இராவணேஸ்வரன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவன் என்றும் அவனை தமிழ் மன்னன் என்று கூறிக்கொண்டு இனவாதத்தை தூண்டிவிட பார்க்கிறார்கள் தமிழர்கள் என சரத்வீரசேகராவும், இராவணன் இலங்கை மண்ணுக்குரித்தான மூத்த தமிழ் குடிமகன் நாகர் என்ற மூத்த குடிகளை சேர்ந்த பரம்பரையிவ் வந்தவன் அவனைப்பற்றி பூரண ஆய்வு செய்தால் தமிழர்கள் இங்கு தோன்றி வளர்ந்த வரலாறு அவர்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்பது உறுதியாகும் என ஸ்ரீதரனும் வாக்கு வாதப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை (21,8.2023) பாராளுமன்றத்தில் இடம் பெற்ற மன்னன் இராவணன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர், புத்திக பத்திரன முன்வைத்த தனிநபர் பிரேரணைமீதான விவாதத்தில் உரையாற்றியபோதே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவாதத்தில் பீதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன் பில எம்.பி உரையாற்றும்போது, இலங்கை தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்பது இராமாயணத்தில் கூறப்பட்டள்ள புஷ்பக விமானம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகத்திலையே சிங்களவர்கள் நீண்ட வரலாற்றை கொண்டவர்கள். எனவே மஹாவம்சம் தொடர்பில் மாத்திரம் கதைத்துக் கொண்டிருக்காமல் அதற்கு அப்பால் சென்று நாம் ஆராயவேண்டும்.
இராமாயணத்தில் எங்கள் வரலாறு கூறப்பட்டுள்ளது என புகழ்ந்து பேசிய நிலையில்தான் இச்சொற்போர் இடம் பெற்றிருக்கிறது, இராவணனை சிங்கள மன்னன் என்றும், அவன் தமிழன் அல்ல என்று வரலாற்றை இவர்கள் திரிக்க எடுக்கும் பிரயத்தனங்களுக்கரிய முக்கிய காரணம் இலங்கையின் பூர்வீக குடிகள் சிங்கள மக்கள், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்பதை சொல்லிக்காட்டுவதற்காவே இந்த இனவாத கெடுபிடிகளை சிங்கள அரசியல் வாதிகளும் புத்தி ஜீவிகளும் முன்னெடுது;த வருகிறார். இந்த வாத குரோதங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு இராவணன் யார் ? என்ற விடயத்துக்கு வருவோம்.
இராவணன் இராமாயணம் என்னும் இதிகாசத்தின் முக்கிய கதாபாத்திரம். இந்த மன்னனின் சிறப்புத்தன்மை என்ன என்று பார்ப்பின்,
1. இராவணன் புலஸ்திய முனிவர் பரம்பரையில் தோன்றிய ஒரு பிராமணன்.
2. சிவனுடைய பக்தனாக மேலான திருநீறு அணிந்து வழிபட்டுவந்தவன்
3. இவனுடைய தாயார் கைகேசி ஒரு சிறந்த சிவபக்தை.
4. இராவணனுடைய மனைவி மண்டோதரி தீவிர சிவபக்தை
5. சிவனிடமிருந்து ஆத்மலிங்கத்தைப்பெறுவதற்காக சிவனை நோக்கி தவமிருந்து லிங்கத்தை பெற்றவன். சுந்திரஹாசம் என்ற வளை பெற்றவன்.
6. சாமவேதத்தை பாடுவதில் நிகரற்றவனாக திகழ்ந்தவன்
7. தனது கை நரம்புகளை வீணையாக்கி சாமவேதத்தை கானமாக பாடியவன்.
8. இராவணன் பிராமணனாகவும் சிவபக்தனாகவும் அனைத்து இதிகாசங்களாலும் சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.
9. 7 ஆம் நாற்றாண்டில் பல்லவர் காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் சம்பந்தபெருமனால் பாராட்டி பாடப்பெற்றவன்.
10. இவனுடைய இயற்பெயர் சிவதாசன் என்றும் மற்றும் நிலவழகி பாண்டியன் என்றும் அழைக்கப்பட்டுள்ளான்
11. இலங்கையிலுள்ள பஞ்ச ஈஸ்வரங்களை வழிபட்டவன் என்பதனால் இராவணேஸ்வரன் என்று அழைக்கப்பட்டான்.
12. ஈஸ்வரப்பட்ட பெற்ற 9 சான்றோரில் இவனுமொருவன்.
13. அரக்கன் ஒருவனை மக்கள் கடவுளாக வழி பட்டிருக்க முடியாது. இந்தியாவில் பல பிரதேச மக்கள் இவனை இன்றும் கடவுளாக வழிபட்டு வருகிறார்கள்.
14. சித்த மருத்தவ நூல்கள் 25 தமிழில் எழுதியுள்ளான்.
15. பாண்டிய வம்சத்தை சேர்ந்தவன் என்பதால் நில வழங்கி பாண்டியன் என அழைக்கப்பட்டு வந்திருக்கிறான்.
16. வீணை பதித்த கொடியை ஏந்தியவன்.
17. தன்தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற திருக்கோணேஷ்
வரத்துக்கு வந்து லிங்கம்பெற கோணை நாதரை வழிபட்டவன்.
18. தாயார் இறந்த செய்தி கேட்டு அவளுக்கு ஈமக்கிரிகை செய்ய திருமலை கன்னியா வெந்நீரூற்றுக்கு சென்றவன்.
இவை அனைத்தமே இராவணன் ஒரு தமிழ் மன்னன் என்பதற்குரிய ஆதாரங்களை வலியுறுத்துகின்றன. புராமணனாக பிறந்தவனை வட இந்திய இலக்கியங்கள் அசுரனாக சித்தரித்தமைக்கு ஆரிய மாயை காரணம்.
இராவணனடைய வாழ்க்கை வரவாறு எவ்வாறு இருந்தது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
பத்து பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான வைச்சிரவ மகரிஷி (விஸ்ரவ முனிவர்) க்கும் அசுரர்குல தலைவர் சுமாலியின் புத்திரி கைகேசிக்கும் பிறந்தவன் இரவணன். இவனது உடன்பிறப்புக்களாக கும்பகர்ணன், விபுடனன், மற்றும் சூர்ப்பனகை ஆவார்கள்.
இவன்பிறப்பு தொடர்பில் இன்னொரு கர்ண பரம்பரை கதையுமுண்டு. இலங்கையை ஆண்ட நாகர் குலத்தைச் சேர்ந்த கைகேசிக்கும் ஏகர் இனத்தை சேர்ந்த வஜ்ரவாகுவுக்கும் பிறந்தவன் என்றும் கூறும் முறையுமுண்டு.
பேர்உரிமை கொண்டவன் பேர்அழகன் என்பதால் இராவணன் என்ற புனைவுப்பெயர் வந்ததாகவும் அல்லது இவனது விரோதிகளால் இழைக்கப்பட்ட பெயர் இரவணன் என்றும் கூறப்படுகிறது. ஆனர் இவன் இயற்பெயர் சிவதாசன் என்றும் இவன் சகோதரர்கள் பெயர் பரமன், பசுபதி உமையம்மை என்று கூறப்படுகிறது.
இராவணனுகு தசக்கிரீவன் , இலங்கேஸ்வரன் , அசுர குலவேந்தன், தசமுகன், திரிலோக அதிபதி, தசகிரிவா, தசாநனா என பல பெயர்களை கொண்டவன் என்றும் இதிகாசங்கள் கூறுகின்றன.
இவன் மண்டோதரி என்ற ராஜகுமாரியை மணம் முடித்து இந்திரஜித், அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன் மற்றும் நராகந்தகன், தேவாந்தகன் ஆகிய ஏழு ஆண்பிள்ளைகளை பெற்றெடுத்தான் என வரலாறு தெரிவிக்கிறது.
தனது தந்தையின் மூத்த மனைவியாகிய வாரவர்னினியின் மகனாகிய குபேரன் ஆண்ட இலங்கையை அவனோடு போரிட்டு கைப்பற்றினான். என்றும் குபேரனுக்கு விசுவகர்மா என்பவரால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட ராஜ்சியமே இலங்காபுரி என்றும் தனது தம்பியுடன் போர்புரிய விரும்பாத குபேரன் நாட்டையும் தன்னிடமிருந்த புஸ்பக விமானத்தையும் இராவணனுக்கு தாரை வார்த்து கொடுத்தான் என்றும் கூறப்படுகிறது.
இராமன், இராவணன் ஆகிய இரு பிரதான நாயகர்களைக் கொண்ட இக்காப்பியத்தை வட நாட்டைச்சேர்ந்த வால்மீகி முனிவர் வட மொழியில் கி.முன் 6–7 நூற்றாண்டில் வால்மீகி இராமாயணம் என்ற பெயரில் எழுதியதாகவும், இதையே கம்பர் கம்பராமாயணம் என்ற பெயரில் சோழர் ஆட்சி செய்த 13 நூற்றாண்டில் கம்பராமாயணம் என எழுதியதாகவும் கூறப்படுகிறது. இராம இராவண கதை பற்றி 400 வகையான கதைகள் உண்டென்றும் குறிப்பாக பௌத்த இராமாயணம் என்ற பெயரில் ஒரு நூல் எழுதப்பட்டிருப்பதாகவும் உலகில் உள்ள பலமொழகளில் எழுதப்பட்ட ஒரு இதிகாசம் இதுவென்றும் கூறுவர்.
இராவணன் பத்து தலை கொண்டவன் என்பது ஒரு புனைவாகவும் இது ஒரு ஓவிய சித்தரிப்பே அன்றி
உண்மை கொண்டதல்ல.இங்கு பத்துத் தலை என்பது மனோ தத்துவம்,இசை மருத்துவம் போன்ற பத்து றைகளில் கைதோந்தவனாக காணப்பட்ட காரணத்தினால் அல்லது 10 நாடுகளை வென்றவன் 10 கரீடம் அணிந்தவன் என்ற காரணத்தினால் பத்து தலை கொண்டவனாக அழைக்கப்பட்டான் என ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.
இராவணன் ஆட்சிக்காலத்தில் இலங்கையில், உன்னத அட்சி நிலவியதாகவும், இராவணன் புஸ்பக விமானத்தை வைத்திருந்ததாகவும், இராமாயணம் கூறுகிறது.
இராமாயண காவியத்தில் அவன் அசுரனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான். இராவணனை பற்றிய குறிப்புக்கள் தமிழில் இருப்பதைவிட சிங்களத்தில் அதிகமாகவும், இராவணனின் மறு பிறப்புத்தான் புத்தர் என்றும் சிங்கள இனத்தை காக்கவே புத்தராக அவதரித்தான் என்றும் இதன்காரணமாக இவன் சிங்கள மன்னன் என்ற திரித்த கதைகளை முன்வைத்து வரலாற்றை மாற்ற நினைக்கும் ஒரு செயல் முறைதான் இராவணன் சிங்கள மன்னன் என்ற வாத பிரதிவாதங்கள் அகும்.
இந்த நிலைக்கு காரணம் சில வட இந்திய காப்பியங்கள் ஆன்மீக நாயகனாக இராமனையும் அரக்க நாயகனாக இராவணனையும் சித்தரித்து காட்டுவதே இதற்கு காரணம். இராவணன் பற்றிய குறிப்புக்கள் புறநாநூறு திருமுறை கலித்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலும் பல்லவர் கால பக்தி இலக்கியங்களிலும் அதிகமாக காணலாம்.
திருமலை நவம்