செய்தி தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 42ஆக அதிகரிப்பு

தமிழகம் – கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் 100 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இறந்தவர்களும், நோயுற்றவர்களும் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு கண்களைத் திறக்கக்கூட முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தை அடுத்து தமிழக அரசுக்கு எதிரான  குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், சம்பவம் குறித்து உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி