மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் எஸ்.டி. அந்தஸ்து கோரும் மேதே சமுதாய மக்களுக்கு எதிராக குகிஇ நாகா உள்ளிட்ட பழங்குடி மக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இதன் காரணமாக கடந்த 3-ம் தேதி மணிப்பூரில் மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. அந்த மாநிலத்தில் 10 மலைப் பகுதி மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் மேதே சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடைகள்இ வீடுகள் சூறையாடப்பட்டன.
இதற்கு பதிலடியாக மேதே சமுதாய மக்களும் வன்முறையில் இறங்கினர். மாநில போலீஸாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரக்காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் அரசு உத்தரவிட்டது.