இஸ்ரேல், ஹமாஸ் போரினால் அதிகரிக்கும் மரணங்கள் – 51,000-ஐ கடந்த எண்ணிக்கை
இஸ்ரேல், ஹமாஸ் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மரணங்களின் எண்ணிக்கை 51,000-ஐ கடந்துவிட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், இஸ்ரேல் நடத்திய பீரங்கி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பினர் 10 பணயக் கைதிகளை விடுவித்தால் 45 நாட்களுக்கு போரை நிறுத்தி, நிவாரண பொருட்களை காசாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்திருந்தது. அதனை பரீசிலிக்க ஹமாஸ் தரப்பில் 48 மணி நேரம் அவகாசம் கோரப்பட்டுள்ளது.





