அமெரிக்காவில் அதிகரிக்கும் மரண தண்டனைகள் – நடப்பு ஆண்டில் 35 பேருக்கு நிறைவேற்றம்

இன்று ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில் இருந்து இந்த ஆண்டு இதுவரை அமெரிக்காவில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மரண தண்டனைகளால் 35 ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், ஏழு பேர் இந்த மாத இறுதியில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர் என்று அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான மொத்த மரண தண்டனைகள் ஏற்கனவே கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட 25 மரண தண்டனைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
1999ல் 98 மரண தண்டனைகள் என்ற பாரிய உச்சத்தை விட தற்போதய எண்ணிக்கைகள் மிகக் குறைவு.
இந்த ஆண்டு 76% மரண தண்டனைகள் புளோரிடா, டெக்சாஸ், அலபாமா மற்றும் தென் கரோலினா ஆகிய மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மரண தண்டனையைப் பயன்படுத்துவதை விரிவுபடுத்துமாறு வலியுறுத்தியதால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தமாக அலபாமா, அரிசோனா, புளோரிடா, இந்தியானா, லூசியானா, மிசிசிப்பி, ஓக்லஹோமா, தென் கரோலினா, டென்னசி மற்றும் டெக்சாஸ் ஆகிய இடங்களில் இந்த ஆண்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.