பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை: என்.பி.பி. அரசு கூறுவது என்ன?
சட்டம் தனக்குரிய கடமையை சரிவர செய்யுமென உறுதியாக நம்புகின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது பங்களாதேஷில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மக்கள் போராட்டம் நடந்த காலப்பகுதியில் பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.
ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. இது விடயத்தில் தாமதம் ஏன் என்று அமைச்சரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
“ சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து, சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டம் பற்றி நீதிமன்றத்தான் தீர்ப்பு வழங்கும்.” என்றார்.





