இந்தியா

10 வயது சிறுவனை நரபலி கொடுத்தவருக்கு மரண தண்டனை!

10 வயது சிறுவனை நரபலி கொடுத்த உறவினர்களுக்கு மரண தண்டனை விதித்து, வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

சிறுவனை நரபலி கொடுத்த கொடூர சம்பவமானது இந்தியா உத்தரப் பிரதேசத்திலேயே அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்தவர் அனூப் குமார் வர்மா.

இவர், தனது மகன் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் ஒரு மந்திரவாதியை சென்று சந்தித்து, ஆலோசனைப் பெற்றுள்ளார்.

“ உங்;கள் குடும்பத்தை சேர்ந்த சிறுவர் ஒருவரை நரபலி கொடுத்தால் உங்கள் மகன் குணமடைவார் ” என்று இதன்போது மந்திரவாதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூட நம்பிக்கையை நம்பிய குமார் வர்மா, தனது உறவினரின் மகனான 10 வயது விவேக் வர்மாவை கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் கடத்திச் சென்று நரபலி கொடுத்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை அனைத்தும் நிறைவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கின் கொடூரத்தன்மை மற்றும் சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அனூப் குமாருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், அவருக்கு இந்திய நாணய மதிப்பில் 1 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட மந்திரவாதி உட்பட இருவர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!