சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கவினால் அவரது கணவரின் மரணம். தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாகத் தெரிவித்து மேற்படி முறைப்பாட்டை செய்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி அதிகாலை கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.01 கிலோமீற்றர் மைல்கல் அருகில், கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் ரக வாகனம், அதே திசையில் அதற்கு முன்னால் சென்ற கொள்கலன் வாகனத்துடன் மோதி, பின்னர் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்து நேர்ந்தது.
விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஒருவரும் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த வாகனத்தை செலுத்திய அவரது சாரதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் ரூ. 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. .