செய்தி

மலாவி துணை அதிபர் மரணம்: 21 நாள்களுக்கு துக்க தினம் அறிவிப்பு

தென் மத்திய ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சாவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் உயிரிழந்ததற்காக அந்த நாட்டில் 21 நாள்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சாவ்லோஸ் சிலிமா மற்றும் அவருடன் விமான விபத்தில் உயிரிழந்த 8 பேரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளை கவனித்துக் கொள்வதற்காக அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலாவி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் மோசமான வானிலை காரணமாக சிறிய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் உயிரிழந்தனர்.

மலை அருகே விமானத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், விமானம் முற்றிலும் சேதமடைந்ததாகவும், விமானத்தில் இருந்த அனைவரும் மோதியதில் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது

மலாவியில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் முக்கிய வேட்பாளராக போட்டியிடுவார் என கருதப்படும் சிலிமா, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், கடந்த மாதம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மலாவி நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இந்தப் பின்புலத்திலேயே விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி