மஹ்மூத் அஹ்மதிநெஜாடின் மரணம் : அதிர்ச்சியில் நாமல் ராஜபக்ஷ!
ஈரானிய முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் ( Mahmoud Ahmadinejad) விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்தி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், அஹ்மதிநெஜாட்டின் படுகொலையைக் கேட்டு “அதிர்ச்சியடைந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் முன்னாள் ஈரானியத் தலைவரின் பங்கை நினைவு கூர்ந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தபோது, சப்புகஸ்கண்டே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்குவதில் அஹ்மதிநெஜாட் முக்கிய பங்கு வகித்தார் என்றும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் எப்போதும் இலங்கையின் உண்மையான நண்பராக இருந்து வருகிறது என்று கூறிய அவர், விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.





