வெளியான நவல்னியின் இறப்புச் சான்றிதழ்: குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா
அலெக்ஸி நவல்னியின் குழு வியாழக்கிழமை X இல் எதிர்க்கட்சி அரசியல்வாதியின் இறப்புச் சான்றிதழில் அவர் இயற்கையான காரணங்களால் இறந்ததாகக் கூறுகிறது.
கிரெம்ளின் அவரைக் கொன்றதாக அவரது குழுவும் குடும்பத்தினரும் குற்றம் சாட்டினர், இந்த குற்றச்சாட்டை கிரெம்ளின் கோபமாக நிராகரித்துள்ளது.
கடந்த வாரம் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் மரணம் அடைந்தார்.
மோசடி, நீதிமன்ற அவமதிப்பு, அறக்கட்டளை மூலமாக முறைகேடாக பணம் பெற்றது, தீவிரவாதத்தை தூண்டுதல் மற்றும் நிதியளித்தல், சட்டவிரோத தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்குதல், நாஜிக் கொள்கைகளுக்கு புத்துயிர் கொடுத்தல் மற்றும் ஆபத்தான செயல்களுக்கு குழந்தைகளை தூண்டுதல் என்ற பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் அலெக்ஸி நவல்னி.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசியாக 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, ரஷ்யாவின் கார்ப் நகரத்தில் உள்ள ஆர்க்டிக் சிறையில் நவல்னி அடைக்கப்பட்டிருந்த நிலையில் மரணம் அடைந்தார்.
அவரது மரணம் சர்வதேச நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.
அவரது மரணம் தொடர்பில் பல்வேறு சர்ச்சை வெடித்த நிலையில் இன்று அவரது இறப்புச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.