ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும் கொடிய வைரஸ் : மக்களுக்கு பிரித்தானியா விடுத்த எச்சரிக்கை

ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு காய்ச்சலை தொடர்ந்து ப்ளீடிங் ஐ வைரஸ் (Bleeding eyes virus) எனப்படும் புதிய வைரஸ் பரவி வருவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ருவாண்டாவில் மாத்திரம் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில், கென்யா, ருவாண்டா, கொங்கோ, உகாண்டா, பொலிவியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு செல்லும் தங்கள் நாட்டுப் பயணிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ப்ளீடிங் ஐ வைரஸ் எனப்படும் இந்த மார்பர்க் வைரஸ் நோய் மனிதர்களுக்கு ஏற்படும் மிகவும் ஆபத்தான நோய் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
இந்த வைரஸ் ஒருவருக்குப் பரவினால் இரண்டு முதல் 21 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.
அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை 3ஆவது நாளில் இருந்து ஆரம்பிக்கும் எனக் கூறப்படுகிறது.