உலகம் செய்தி

அமெரிக்க இராணுவ விமான விபத்து – நால்வரின் உயிரிழப்பு உறுதி

அண்மையில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானத்தில் இருந்த ஆறு பேரில் நால்வர் உயிரிழந்துள்ளதாக
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை X தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விமான விபத்து பகைமை துப்பாக்கிச் சூடு அல்லது நட்பு ரீதியான துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்டதல்ல என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெளிவுபடுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் அவர்களது குடும்பத்தினருக்கு முதலில் அறிவிக்கப்படும் வரை, அடுத்த 24 மணி நேரம் வரை வெளியிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Boeing KC-135 Stratotanker எரிபொருள் நிரப்பும் விமானம் “நட்பு வான்வெளி” என குறிப்பிடப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை மாலை விபத்துக்குள்ளானதாகவும், அதே சம்பவத்தில் மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!