இலங்கை வில்பத்து கடற்பரப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த டால்பின்கள்!
வில்பத்து தேசிய பூங்காவின் கரையோர எல்லையில் 11 டால்பின்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, வனவிலங்கு அதிகாரிகளின் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
வனவிலங்கு கால்நடை வைத்திய அதிகாரிகளான சந்தன ஜயசிங்க மற்றும் டபிள்யூ.எல்.யு. மதுவந்தி பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார், டால்பின்கள் கரை ஒதுங்குவதற்கு முன்பு மீன்பிடி வலையில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
அவர்களின் கண்டுபிடிப்புகள் ஜனவரி 7 ஆம் திகதி புத்தளம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக திசு மாதிரிகள் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்திற்கு மேலதிக ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
(Visited 2 times, 1 visits today)